சினிமா

கவண்

Published On 2017-02-20 04:19 GMT   |   Update On 2017-02-20 04:19 GMT
சமுதாய சூழ்நிலையை சொல்லும் படமான `கவண்' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கவண்’. கடந்த ஆண்டு  ‘அனேகன்’, ‘தனிஒருவன்’ ஆகிய வெற்றிப்படங்களை வழங்கிய ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்த ஆண்டு தயாரித்து வழங்கும் முதல்  படம் இது.

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவரஇருக்கிறது. இந்த படம் இன்றைய சமூக  சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கிறது. சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என ஒரு சுவாரசிய  சினிமாவிற்கான அனைத்து லட்சணங்களையும் உள்ளட க்கிய படமாக ‘கவண்’ அமைந்திருக்கிறது.

விஜய்சேதுபதி ‘கவண்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர்  கவண் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். பாண்டியராஜன், விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ்வெங்கட்,  ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் கே.வி. ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர்  இணைந்து கவண் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- அபிநந்தன் ராமானுஜம், இசை- ‘ஹிப் ஹாப்’ தமிழா.

அருண்ராஜா காமராஜ் எழுதி டி.ஆர். பாடிய ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.

கலை-கிரண், படத்தொகுப்பு- ஆண்டனி,தயாரிப்பு- கல்பாத்தி எஸ்.அகோரம்,கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்திஎஸ்.சுரேஷ்.

Similar News