சினிமா

கட்டப்பாவ காணோம்

Published On 2016-06-28 22:05 IST   |   Update On 2016-06-28 22:05:00 IST
விண்ட் சைம்ஸ் மீடியா என்டர் டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம்‘ கட்டப்பாவ காணோம்’. சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
விண்ட் சைம்ஸ் மீடியா என்டர் டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம்‘ கட்டப்பாவ காணோம்’. சிபிராஜ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி, காளிவெங்கட், யோகிபாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், திருமுருகன், ஜெயகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் இயக்குனர் நலன்குமாரசாமி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். படத்தொகுப்பு- சதீஷ் சூர்யா, கலை- லட்சுமி தேவ், இயக்கம்- மணி செய்யோன். இவர் அறிவழகனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு மீன் கதையின் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது.

படம் குறித்து இயக்குனர் மணி செய்யோன் கூறும் போது....

எனது பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒரு செல்லப்பிராணி மீன் தான். என்னுடைய ஓய்வு நேரத்தை அவைகளுடன் கழிப்பேன். நாயை போலவே மீன்களுக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தியும், ஆற்றலும் இருக்கிறது. அவைகளை ஹீரோவாக மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சி தான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’. எப்படி சிபிராஜின் தந்தை சத்யராஜ் சாருக்கு பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படங்கள் அமைந்ததோ அதே போல் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் சிபிராஜுக்கு சிறந்த மைல் கல்லாக அமையும்” என்றார்.

Similar News