சினிமா

அப்பா

Published On 2016-06-26 22:15 IST   |   Update On 2016-06-26 22:15:00 IST
நாடோடிகள் பட நிறுவனம் வழங்க, இயக்குனர் பி.சமுத்திரகனி தயாரித்து இயக்கும் படம் ‘அப்பா’. இதில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். அவருடன் தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோநாராயணன், வேலா ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேபிரில்லா, நிஷாத், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு- ரிச்சர்டு எம் நாதன், படத்தொகுப்பு- ஏஎல் ரமேஷ், கலை-ஜாக்கி, எழுத்து,இயக்கம், தயாரிப்பு- பி.சமுத்திரகனி

ஒரு தந்தையின் கடமை உணர்வை பிரதிபலிக்கும் கதையாக ‘அப்பா’ உருவாகி இருக்கிறது. படம் பற்றி சமுத்திரக்கனி கூறும் போது...

“இது தந்தை மகன் உறவை சொல்லும் கதை. தற்போதய சமூக பிரச்சினைகள், குடும்பபாசம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் சுதந்திரத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். ஒரு குழந்தையின் கடைசி நம்பிக்கை அப்பா. எனவே, அவர்களுக்கு எதிராக தந்தை நடந்து கொள்ளக்கூடாது. ஒரு தந்தையின் அன்பும் அரவணைப்பும் இருந்தால் தான் அது குழந்தையை நல்வழிபடுத்தும் என்பதே கதையின் கரு.

படத்தை எடுத்து முடித்த பிறகுதான் இளையராஜாவை இசை அமைக்கும் படி கேட்டுக் கொண்டேன். அன்புடன் ஒப்புக் கொண்டார். அவர் இசை அமைத்த பிறகு படத்தின் தகுதி பல மடங்கு உயர்ந்திருக்கிறது. வருகிற 1-ந்தேதி ‘அப்பா’ திரைக்கு வருகிறது” என்றார்.

Similar News