சினிமா

பட்டதாரி

Published On 2016-06-23 17:02 GMT   |   Update On 2016-06-23 17:02 GMT
ஜெஸ் மூவிஸ் தயாரித்துள்ள படம் ‘பட்டதாரி’. இதில் அபிசரவணன் முக்கிய நாயகனாக நடிக்கிறார். அதிதி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சங்கர், செந்தில், கார்த்திக், ஆனந்த், ராசிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
ஜெஸ் மூவிஸ் தயாரித்துள்ள படம் ‘பட்டதாரி’. இதில் அபிசரவணன் முக்கிய நாயகனாக நடிக்கிறார். அதிதி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சங்கர், செந்தில், கார்த்திக், ஆனந்த், ராசிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் மகாநதி சங்கர், கிரேன் மனோகர், கலையரசன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை–எஸ்.எஸ்.குமரன், ஒளிப்பதிவு– சூரியன், படத்தொகுப்பு–ரிச்சர்டு கெவின், ஸ்டண்ட்–எம்.கே.முருகன், கலை– ஆனந்த்மணி, நடனம்–சுரேஷ், தயாரிப்பு– எஸ்.இளங்கோவன் லதா. எழுத்து, இயக்கம்–ஏ.ஆர். சங்கர் பாண்டி. படம் பற்றி இயக்குனர் சங்கர் பாண்டியிடம் கேட்ட போது....

மதுரையை களமாக கொண்டு இந்த கதை படமாக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்து விட்டு சில வருடங்கள் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? நினைத்ததை சாதித்தார்களா? என்பது இதன் திரைக்கதை.

அபிசரவணன் முக்கிய நாயகன். அதிதி நாயகி. இவர் கேரளாவை சேர்ந்தவர். 2–வது நாயகி ராசிகா சென்னையை சேர்ந்தவர். ஹீரோவின் நண்பர்கள் 4 பேர். இந்த 5 பேரும் ஒன்றாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் 5 பேருக்கும் தனித்தனி காதலிகள். தனித்தனி பிரச்சினைகள். அதை எப்படி சமாளித்தார்கள்? என்பதை ‘பட்டதாரி’ படத்தில் வித்தியாசமாக சொல்லி இருக்கிறேன். இதில் நடிக்கும் 4 இளைஞர்கள் கூத்துப் பட்டறையை சேர்ந்தவர்கள் யதார்த்தத்தை சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது” என்றார்.

Similar News