சினிமா

மஞ்சள்

Published On 2016-06-01 18:48 IST   |   Update On 2016-06-01 18:48:00 IST
டாண் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள்’. இதில் திரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்றவர். கதாநாயகியாக புதுமுகம் சசி அறிமுகம் ஆகிறார்.
டாண் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘மஞ்சள்’. இதில் திரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்றவர். கதாநாயகியாக புதுமுகம் சசி அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் ராஜ்கபூர், சண்முகராஜன், செவ்வாளை, தவசி, பூவிதா, செந்தில்குமாரி, ஜெயசூர்யா, மதுரைஜானகி, சம்பத்ராம், திருப்பதி, கோவை உமா, பெருமாயிபாட்டி, பாப்புபாட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-சதீஷ்குமார், இசை- செல்வநம்பி, படத் தொகுப்பு-எல்.வி.தாஸ், பாடல்கள்- யுகபாரதி, கபிலன், கானாபாலா, எடாசி, கலை- சிவக்குமார், நடனம்- தீனா, சாண்டி, ஜாய்மதி. தயாரிப்பு- கணேஷ், சுரேஷ். இயக்கம் - சத்யா சரவணா. படம் பற்றி இயக்குனர் சொல்கிறார்...

இது ஒரு கிராமத்து காதலை பின்னணியாக கொண்ட கதை. வழக்கமாக திரைப்படங்களில் காதலுக்கு குடும்பம், அந்தஸ்து, சமூக அமைப்பு, சாதி போன்றவை எதிராகவும், தடையாகவும் இருக்கும். ஆனால் இந்த படத்தில் காதலுக்கு இடையூறாக இருக்கும் வேறு ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம்.

நாயகன் தப்பாட்ட கலைஞன். அவன் தனது முறைப்பெண்ணை காதலிக்கிறான். இதில் ஏற்படும் பிரச்சினைகளை, யதார்த்தமாகவும், சுவையாகவும் சென்டிமென்ட் கலந்து கொடுத்திருக்கிறோம். மதுரை பகுதியில் இது படமாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் கதைக்கு உயிரூட்டும் விதத்தில் அமைந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக உருவாகி இருக்கும் ‘மஞ்சள்’  இம்மாதம் திரைக்கு வருகிறது. 

Similar News