சினிமா

வில்லாதி வில்லன் வீரப்பன்

Published On 2016-05-24 15:42 GMT   |   Update On 2016-05-24 15:42 GMT
வைகிங் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. இது தமிழக கர்நாடக வனப்பகுதியில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கதை.
வைகிங் மீடியா அன்ட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் படம் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’. இது தமிழக கர்நாடக வனப்பகுதியில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கதை. இந்த படத்தில் சந்தீப் பரத்வாஜ், சச்சின் ஜே ஜோஷி, உஷா ஜாதவ், லிசாரேய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- அனிகித்கண்டகலே, இசை-ஜீட் கங்குலி, பின்னணி இசை-ஜான் ஸ்டீவர்ட், எடூரி, கதை- ஆர்.டி.டெலாங்,ஸ்டண்ட்- ஆலன்அமின். படத்தொகுப்பு- அன்வர் அலி, தயாரிப்பு-ரெய்னா சச்சின் ஜோஷி, இயக்கம்-ராம்கோபால் வர்மா.

படம் பற்றி கூறிய ராம் கோபால் வர்மா..... ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படம் இந்தியிலும், தமிழிலும் தயாராகி இருக்கிறது. இதில் சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயங்களை சொல்லி இருக்கிறேன். வீரப்பனை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் அமைத்த வியூகம், பின்னர் அவன் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றிய சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

வீரப்பனை பற்றிய திகில் சம்பவங்கள் இதில் உள்ளன. இது நிச்சயம் தமிழ் ரசிகர்களை கவரும். இந்தியில் இந்த படம் வருகிற 27-ந்தேதியும், தமிழில் ஜூன் 3-ந்தேதியும் திரைக்கு வருகிறது” என்றார்.

Similar News