சினிமா

சாரல்

Published On 2016-05-04 21:13 IST   |   Update On 2016-05-04 21:14:00 IST
ரெயின்போ மூவி மேக்கர்ஸ் (பி) லிமிடெட் திரைப்பட கம்பெனி சார்பில் தயாரிக்கும் படம் ‘சாரல்’. இதன் நாயகனாக டி.வி.தொகுப்பாளர் அஸார், நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்கள். கோபால கிருஷ்ணன் ‘சாரல்’ படத்தின் கதாநாயகி தந்தையாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

நாயகன் அஸார் நண்பர்களாக காதல் சுகுமார், பவர்ஸ்டார் சீனிவாசன், கோவை பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்.
வில்லனின் மூன்றாவது அடி ஆளாக இதில் பவர்ஸ்டார் நடிக்கிறார். இவர் முதல் அடி ஆளாக வரவேண்டும் என்று ஆர்வகோளாறால் ஏற்படும் சம்பவங்களே நகைச்சுவை கலகலப்பாக அமைந்திருக்கிறது. கோவை பாபு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளை நம்ப வைத்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இசை- இஷான் தேவ், ஒளிப்பதிவு -சங்கரலிங்கம் செல்வகுமார், படத்தொகுப்பு- விஷ்ணு நாராயணன், ஸ்டண்ட்- தவசி ராஜ், நடனம்- ராதிகா, ராம்சிவா. தயாரிப்பு-வி.ஏ.ஏ. ஆர்.கதிகை, இயக்கம்- டி.ஆர்.எல்.

பஸ்சில் பயணம் செய்யும் நாயனுக்கும் நாயகிக்கும் காதல் ஏற்படுகிறது. பஸ்சில் இருந்து இறங்கும் நாயகன் இன்னொரு வாகனம் மோதி உயிர் இழக்கிறான். இதை நேரில் பார்க்கும் நாயகி பைத்தியம் ஆகிறார். இப்படி ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு பேரம்பாக்கம், மரக்காணம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்தது. மே மாதம் இறுதியில் ‘சாரல்’ படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News