சினிமா

ஜூலியும் நாலு பேரும்

Published On 2016-05-01 19:18 IST   |   Update On 2016-05-01 19:18:00 IST
சர்வதேச நாய் கடத்தல் கும்பலின் அட்டகாசம் ‘ஜுலியும் நாலுபேரும்’
ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸ் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ் ஆர்.வி.க்கு இது முதல் படம்.

படம் குறித்து இயக்குநர் சதீஷ் ஆர்.வி.கூறுகையில், “இந்த படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப்பற்றியது. அது மட்டுமல்ல முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்.

டி.வி.புகழ் அமுதவாணன், ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இதில் ஜூலி என்ற பாத்திரத்தில் நடித்த நாய், இந்த படத்தின் ஹீரோ மூலம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘பெக்லி’ வகையை சேர்ந்த லக்கி என்ற நாய்” என்றார்.

இந்த படத்தில் கே.ஏ.பாஸ்கர் ஒளிப்பதிவாளராகவும், ரகுஸ்ரவன்குமார் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்கள்.

ஒளிப்பதிவு– கே.ஏ.பாஸ்கர், இசை–ரகு சரவணகுமார், படத்தொகுப்பு– வ.மழைதாசன், நடனம்– இசட்.அருண், எழுத்து,இயக்கம்– சதீஷ்.ஆர்.வி.

Similar News