சினிமா

மானசி

Published On 2016-04-17 21:37 IST   |   Update On 2016-04-17 21:37:00 IST
மூவி மேஷன்ஸ் - எம்.ஜே பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மானசி’. நரேஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார்.
மூவி மேஷன்ஸ் - எம்.ஜே பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மானசி’. நரேஷ்குமார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் இவர் நாயகியாக இதில் அறிமுகமாகிறார். இவர்களுடன் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் -இருவி, ஒளிப்பதிவு -கண்ணன் பட்டேல், இசை -ஷிவ்ராம் , பாடல்கள் - திண்டுக்கல் சாமிநாதன், நடனம்-விவேக், எடிட்டிங்-அச்சுவிஜயன். கதை, திரைக்கதை, இயக்கம்- -நவாஸ் சுலைமான். இவர் மலையாள இயக்குனர்கள் கமல், பாசில் போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். தயாரிப்பு -ஏ.பாஹின் முகமது, மேத்யூ ஜோசப்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... “கதாநாயகன் அன்பு (நரேஷ்குமார்) குலத்தொழில்ஆடு மேய்ப்பது. அந்த ஆடுகளை தனது குடும்பத்து உறுப்பினர்களாக கருதுகிறான். ஒரு ஆடு காணாமல் போகிறது. பதை பதைத்துப் போய் விடுகிறான். மாயம் ஆன அந்த ஆட்டுக்குட்டி கிடைத்ததா? இல்லையா என்பதை புதிய கதை களத்தில் நெகிழ்ச்சியுடன் உருவாக்கி உள்ளோம். உயிரோட்டமான கமர்ஷியல் படைப்பாக ‘மானசி’ தேனி, கம்பம், உத்தமபாளையம், போடி, ஊத்துக்காடு, கோம்பை போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் உருவாகி உள்ளது”என்றார்.

Similar News