சினிமா

கடல் தந்த காவியம்

Published On 2016-04-07 21:48 IST   |   Update On 2016-04-07 21:49:00 IST
ஜார்ஜ் பிலிம் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படம்‘கடல் தந்த காவியம்‘. இந்த படத்தின் கதாநாயகனாக அப்ரஜித், நாயகியாக அஸ்ருதா நடித்திருக்கிறார்கள்.
ஜார்ஜ் பிலிம் இண்டர் நேஷனல் தயாரிக்கும் படம்‘கடல் தந்த காவியம்‘. இந்த படத்தின் கதாநாயகனாக அப்ரஜித், நாயகியாக அஸ்ருதா நடித்திருக்கிறார்கள். இசை-சரத் பிரியதேவ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு-பிரகாஷ் ஜியோ. இந்த படத்தை தயாரித்து இயக்கியது பற்றி அவரிடம் கேட்ட போது...

“ஜாதி மதம் கடந்து காதலிக்கும் ஜோடி தற்கொலை செய்ய முயல்கிறது. அப்போது தேவாலயத்தின் மணி ஒலிக்கிறது. தேவ வாக்கியம் அவர்களை சிந்திக்க வைக்கிறது.

மாதா கோவிலில் தஞ்சம் அடையும் அவர்களுக்கு தேவாலயத்தின் குருவானவர் மாதாவின் அற்புதங்களையும் பெருமைகளையும் சொல்கிறார். அறிவுரை கூறுகிறார். அதை கேட்டு காதல் ஜோடி தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றார்களா? என்பது கதை. இது நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த கதை.

இந்த படத்துக்காக ஒரு ஓலை குடிசை. ஆலயத்தை தீவைப்பது போன்று ஒரு காட்சியை எடுத்தோம். காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட அந்த குடிசையில் தீவைத்த போது திடீர் என்று வீசிய சூறைக்காற்றால் அருகில் இருந்த உடை மரங்களிலும் தீ பிடிக்க காடே எரியத் தொடங்கிறது.

போராடி தீயை அணைத்தோம். வடக்கன்குளம் கோவிலில் உள்ள மாதா சொரூபம் மீது மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி சூரிய ஒளிபடுவது போன்று ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதை மின்சார விளக்கை அமைத்து எடுக்க முயன்றோம். பல்வேறு தடைகள் காரணமாக அந்த காட்சியை படமாக்க முடியவில்லை. பின்னர் அதை ‘கிராபிக்ஸ்’ செய்து இருக்கிறோம்.

இதுபோல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து இதை படம் ஆக்கி இருக்கிறோம். இந்த படத்தில் ‘டூயட்’ பாடலையும் சேர்த்திருக்கிறோம். விரைவில் ‘கடல் தந்த காவியம்‘ திரைக்கு வருகிறது” என்றார்.

Similar News