சினிமா

குடியரசு தினத்திற்கு சூர்யாவின் ’சி-3’ திரைப்படம் வெளியாகவில்லை

Published On 2017-01-23 20:44 IST   |   Update On 2017-01-23 20:44:00 IST
தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு நிலை சரி இல்லாததால், குடியரசு தினத்தன்று வெளியாக இருந்த ‘சி-3’ திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது ‘எஸ்-3’ படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம், இந்த மாதம் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர். 

போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News