சினிமா
நடிகையின் முயற்சியை கண்டுக்கொள்ளாத இயக்குனர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையின் முயற்சியை பலரும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம்.
அழகா, குண்டாக இருந்த நடிகையை ரசிகர்கள் பலருக்கும் பிடித்திருந்ததாம். என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டாராம். அவர் எடையை குறைத்ததோடு மார்க்கெட் மரண அடி வாங்கிவிட்டதாம். ஒல்லியான பிறகு நடிகையை பார்க்க பரிதாபமாக, வயதானவர் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்களாம்.
நடிகை அவ்வப்போது தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறாராம். பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால், யாருமே கண்டுகொள்வது இல்லையாம். வாய்ப்புகள் கிடைக்காததால், நடிகையின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கிறதாம்.