சினிமா

அதை அடைந்தே தீருவேன் - நாயகியின் சபதம்

Published On 2018-09-26 20:35 IST   |   Update On 2018-09-26 20:35:00 IST
தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஒருவர் நம்பர் 1 நடிகையின் இடத்தை பிடித்தே தீருவேன் என்று சபதம் செய்திருக்கிறராம். #Gossip
தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு சமமாக வலம் வருகிறாராம் கோலமாவு நடிகை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை, அதில் வெற்றியும் பெற்று வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்தை நடிகை தக்கவைத்துக் கொண்டிருக்கிறாராம். இந்த நடிகைக்கும், மோகினியான மூன்றெழுத்து நடிகைக்கும் ஆரம்பத்தில் இருந்தே தொழில் போட்டி இருக்கிறதாம். இந்த நிலையில், இருவரும் ஒரு ‘பார்ட்டி’யில் சந்தித்துக் கொண்டார்களாம். அதில் இருவரும் மனம் விட்டு பேசி தோழிகளாக மாறிவிட்டார்களாம்.

என்றாலும், 2 பேரிடையேயும் சத்தமே இல்லாமல் தொழில் போட்டி இருந்து வருகிறதாம். நம்பர் 1 நடிகையின் நட்சத்திர அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவது, மூன்றெழுத்து நடிகைக்கு பிடிக்கவில்லையாம்.



நம்பர் 1 இடத்தை எப்படியாவது பிடித்தே தீருவேன் என்று மூன்றெழுத்து நடிகை சபதம் எடுத்து இருக்கிறாராம். நடிகையின் சபதம் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். #Gossip

Tags:    

Similar News