சினிமா
நடிகையை திட்டித் தீர்த்த ரசிகர்கள்
பிகினி அணிந்தபடி தனது நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்களாம். #Gossip
பிகினி அணிந்தபடி தனது நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்களாம்.
தமிழ் சினிமாவில் பிரகாசமான வில்லன் நடிகரின் படத்தில் அறிமுகமான அந்த நடிகை பின்னர் சூப்பரான உச்ச நட்சத்திரத்துக்கு மனைவியாக நடித்தாராம். அதே நேரத்தில் அவ்வப்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அந்த நாயகி, அவ்வப்போது சர்ச்சை படங்களிலும் நடித்து திட்டு வாங்கினாராம்.
இந்நிலையில், அந்த நாயகி நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலிவுட் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அந்த பட வெற்றியை நாயகி தனது நண்பர்களுடன் பீச்சில் கொண்டாடினாராம். அப்போது பிகினி அணிந்து கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டாராம்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், திருமணம் ஆன இந்திய பெண், நண்பர்கள் முன்பு இப்படித்தான் நீச்சல் உடை அணிவதா? திருமணமான ஒரு பெண் செய்யும் காரியமா இது? என திட்டித் தீர்த்துவிட்டார்களாம். இதைப்பற்றி கவலைப்படாத நாயகி, ரசிகர்களின் விமர்சனத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாராம். #Gossip