சினிமா
தமிழில் நடிக்க தூது அனுப்பும் நடிகை
தமிழில் அறிமுகமாகி சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போன ஒல்லி நடிகை, அங்கு மிகவும் பிரபலமானாராம்.
தமிழில் அறிமுகமாகி சரியான வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போன ஒல்லி நடிகை, அங்கு மிகவும் பிரபலமானாராம். பின்னர் சில இந்தி படங்களுக்கு தாவி ஓரளவிற்கு அங்கு பிரபலமானாராம். பின்னர் அங்கு மார்க்கெட் டல்லடிக்கவே மறுபடியும் தெலுங்கு பக்கம் வந்தாராம்.
தற்போது நிறைய இளம் நடிகைகள் வருவதால் நடிகையை யாரும் சீண்ட வில்லையாம். மேலும் காதல், திருமண சர்ச்சையில் சிக்கியதால், வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இந்த நிலையில், நடிகை தமிழில் கிளாமர் இல்லாத ரோல்கள் கிடைக்குமா என்று தூது அனுப்பி இருக்கிறாராம்.