சினிமா

நடிகையின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகர்

Published On 2018-01-21 18:09 IST   |   Update On 2018-01-21 18:09:00 IST
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் சௌந்தரமான நடிகர், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். சமூக அக்கறையிலும் ஆர்வம் கொண்ட இவர் திடீர் என்று வீரமான நடிகையுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானதாம்.

இதையறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்களாம். வீரமான நடிகையுடன் திருமணமா? எங்கையோ இடிக்குதே... இருவருக்கும் சம்மந்தமே இல்லை எப்படி நடந்திருக்கும் என்று முணுமுணுத்தார்களாம். இருந்தாலும், இருவரும் தர்மமான படத்தில், சேர்ந்து நடித்திருந்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கும் என்றும் பேசினார்களாம்.

இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத சிலர் வைத்தெரிச்சலால், நடிகருக்கு போன் செய்து அதை உறுதி செய்தார்களாம். பின்னர்தான் தெரிந்ததாம். பெயர் ஒன்றுதான். ஆனால், ஆள் வேற என்று. 

Similar News