சினிமா

அந்தஸ்து கிடைக்கவில்லை என்று புலம்பும் நடிகை!

Published On 2017-11-27 23:09 IST   |   Update On 2017-11-27 23:09:00 IST
நடிப்பதுடன் நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசையாம்.
நடிப்பதுடன் நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று ஆசையாம். அவர் நடிக்கும் படங்கள் ஓடினாலும் அவர் விரும்பும் அந்தஸ்து மட்டும் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லையாம்.

நான் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன, விளம்பர நிகழ்ச்சிகளை நான் புறக்கணிப்பது இல்லை, படங்கள் பற்றி நல்லவிதமாக பேசுகிறேன் அப்படி இருந்தும் ஏன் எனக்கு முன்னணி நடிகை அந்தஸ்து கிடைக்கவில்லை என்று புலம்புகிறாராம் நடிகை.

ஆனால், நடிகைக்கு திமிர், பிடிவாதம், பந்தாவுக்கு குறைச்சலே இல்லையாம். முதலில் அதை எல்லாம் தூக்கிப்போட்டால் தான் முன்னணி நடிகையாக முடியும் என்று பலரும் முணுமுணுக்கிறார்களாம்.

Similar News