சினிமா

அம்மாவை போல மாற ஆபரேஷன் செய்யும் நடிகை

Published On 2017-11-25 17:45 IST   |   Update On 2017-11-25 17:45:00 IST
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்த நடிகையின் மகள் தற்போது நடிகையாக மாறியிருக்கும் நிலையில், தனது அம்மாவைப் போல மாற ஆபரேஷன் செய்யவிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் 80-களில் கொடிகட்டிப் பறந்த மயிலு நடிகை பாலிவுட் தயாரிப்பாளர் மணந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டாராம்.

தமிழில் நடித்த வரையில் அவர் அழகுப் பதுமயாக இருந்த போதிலும், பாலிவுட் சென்ற பின்னர் அவரது மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது அவருக்கு செட்டாகவில்லை என்று கோலிவுட்டில் கூறப்பட்டாலும், பாலிவுட்டில் அவருக்கு வரவேற்பு கிடைத்ததாம்.

அவ்வப்போது அந்த நடிகை தமிழிலும் தலைக்காட்டி வருகிறார்.

இந்நிலையில், தற்போது பாலிவுட் சினிமாவில் ரீமேக் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் மயிலு நடிகையின் முதல் மகள் அவரது மூக்கை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

Similar News