சினிமா

புதிய ஆசையால் சிக்கித் தவிக்கும் நடிகை!

Published On 2017-08-30 22:54 IST   |   Update On 2017-08-30 22:54:00 IST
நடிகையின் புதிய ஆசையால், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதில் சிக்கி தவிர்த்து வருகிறாராம்
தற்போது முன்னணி நடிகைகள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். ஒன்று கைவிட்டாலும் இன்னொரு படம் கைகொடுப்பதுடன் ஹீரோ நடிக்கும் படத்துக்கு சமமாக தங்களுக்கும் இதுபோன்ற படத்தில் முக்கியத்துவம் தரப்படுவதால் விரும்பி ஏற்கின்றனர். இதுநாள் வரை பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த வீர நடிகை, திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள லீட் ரோல் நடிக்க ஆசை வந்திருக்கிறதாம்.

வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு தெலுங்கு படம் ஒன்று கிடைத்திருக்கிறதாம். கதை முழுவதும் தன் தோள் மீது தாங்கவேண்டிய பொறுப்பு நடிகைக்கு ஏற்பட்டிருப்பதால் முழுகவனத்தையும் கதாபாத்திரம் பக்கம் திருப்பி இருக்கிறாராம். கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுவதால் மிகவும் கடினமாக இருக்கிறதாம். தெரியாமல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டோ என்று எண்ணுகிறாராம் நடிகை.

Similar News