சினிமா

டிவி நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனசோர்வால் இமயமலைக்கு சென்ற நடிகை

Published On 2017-08-18 12:07 IST   |   Update On 2017-08-18 12:07:00 IST
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் போட்டியாளராக பங்கேற்று, பின்னர் வெளியேறிய நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மனசோர்வால் இமயமலைக்கு சென்றிருக்கிறாராம்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெரிய பாஸ் என்ற பெயரில் ஒரு வீட்டுக்குள் குறிப்பிட்ட நாட்கள் வரை இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளுடன் சினிமா பிரபலங்கள் பலரை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. 

அந்தவகையில் ஒவ்வொரு வாரமும் அந்த வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேறி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் உலக நடிகர் என்ற அழைக்கப்படும் நடிகர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவ்வாறாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறியவர்களில் ஒருவர் தான் அந்த மச்சான்ஸ் நடிகை. தமிழில் அறிமுகமான நேரத்தில் மிகப் பிரபலமான அந்த நடிகை, அவரது உடற்கட்டு பிரச்சனையால் படங்களில் நடிக்காமல் இருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த நடிகை சமீபத்தில் வெளியேறினார். கிட்டத்தட்ட 30 நாட்கள் அந்த வீட்டில் எந்த தொடர்பும் இன்றி இருந்ததால் ஏற்பட்ட மனசோர்வை போக்க அந்த நடிகை இமயமலைக்கு சென்றிருக்கிறராம்.

பொதுவாக மனஉளைச்சல், மனசோர்வு உள்ளிட்ட காரணங்களால் நடிகர்கள் தான் இமயமலைக்கு செல்வதாக பார்த்திருக்கிறோம். நடிகை ஒருவர் சென்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

Similar News