சினிமா

பிரமாண்ட நாயகருடன் கிசுகிசுக்கப்பட்ட தமிழின் முன்னணி நடிகை

Published On 2017-08-16 17:49 IST   |   Update On 2017-08-16 17:49:00 IST
தமிழின் முன்னணி நடிகை ஒருவர் பிரமாண்ட நாயகருடன் காதல் வலையில் சிக்கியிருப்பதாக வெளியான கிசுகிசுக்களுக்கு நாயகி விளக்கம் அளித்திருக்கிறாராம்.
கண் மைக்கு வேறு பெயரையே தனது பெயராக கொண்ட அந்த நாயகி தமிழில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வருகிறார். தமிழின் உச்ச நடிகர்கள் இருவரது படங்களிலும் நடிகை தற்போது நடித்து வருகிறார். அந்த இரு படங்களுமே விரைவில் ரிலீசாக இருக்கிறது.

மேலும் தெலுங்கில் பிரம்மாண்ட படத்தில் நடித்த உயர்ந்த வில்லன் நாயகனுடன் நாயகி நடித்திருக்கும் அரசியல் சாயல் கொண்ட படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த படத்தில் நடித்த போது நாயகன், நாயகி இருவருக்கும் இடையே காதல் வந்துவிட்டதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதன் காரணமாகவே எந்தவொரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத அந்த நடிகை அவரது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாராம். இந்த தகவல் நாயகியின் காதுக்கு செல்ல, இதுகுறித்து விளக்கம் அளித்த அந்த நடிகை, தனக்கும் அந்த நாயகனுக்கும் இடையே நட்பை தவிர வேறு ஒன்றும் இல்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறியிருக்கிறாராம்.

அதற்கு முன்னதாக நாயகி அளித்த பேட்டியொன்றில், காதலுக்கு அப்பறம் தான் திருமணம் செய்வேன் என்றும், தான் காதலிக்கும் நபர் சினிமாவிற்கு அப்பாற்பட்டவராய் இருந்தாலும் பரவாயில்லை. உயரமாக, நல்லவராக இருந்தால் போதும் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

Similar News