சினிமா

ஹிட் லிஸ்டில் இருந்த மங்களகரமான நடிகையின் பரிதாப நிலை

Published On 2016-11-08 13:54 IST   |   Update On 2016-11-08 13:54:00 IST
ஹிட் லிஸ்டில் இருந்த மங்களகரமான நடிகை தற்போது பரிதாப நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
யானை படத்தின் மூலம் அறிமுகமான மங்களகரமான நாயகி நடித்த முக்கால் வாசி படங்கள் ஹிட் லிஸ்டில்தான் உள்ளன. ஆனால், சமீபகாலமாக இவருடைய மார்க்கெட் சற்று டல் அடிக்க ஆரம்பித்துள்ளதாம். இதனால், தனது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கான வழியை நடிகை தேடி வருகிறாராம்.

அப்போதுதான் அவரது காதுக்கு தன்னை அறிமுகப்படுத்திய யானை இயக்குனர் மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. இதையறிந்ததும் ஓடிப் போய் யானை இயக்குனரிடம் சென்று அந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டாராம்.

ஆனால், இயக்குனரோ அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நான் புதுமுக நடிகையை வைத்துதான் எடுக்கப் போகிறேன். அதனால், உனக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டாராம். நடிகையும் வேறு வழியின்றி தலையை தொங்கப்போட்டு அங்கிருந்து திரும்பினாராம். ஹிட் லிஸ்டில் இருந்த நடிகைக்கு இந்த நிலைமையா? என்ற கோலிவுட் வட்டாரத்தில் இவரைப் பற்றிய பேச்சுத்தான் இப்போது ரொம்பவும் சூடாக சென்று கொண்டிருக்கிறதாம். 

Similar News