சினிமா

மனக் கஷ்டத்தில் இருக்கும் உச்ச நடிகர்!

Published On 2016-09-20 18:09 IST   |   Update On 2016-09-20 18:09:00 IST
உச்ச நடிகர் மனக்கஷ்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அது எதற்காக? என்பதை கீழே பார்ப்போம்...
கோலிவுட்டின் உச்ச நடிகராக திகழ்பவர் தற்போது மிகுந்த மனக்கஷ்டத்தில் இருக்கிறாராம். இதற்கு காரணம் அவரது இரண்டாது மகள் என்று கூறப்படுகிறது. தனது மூத்த மகள் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இரண்டாவது மகளுக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

ஆனால், தான் பார்த்து பார்த்து செய்த அந்த இரண்டாவது மகளின் திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரத்தில் கலைந்து போகும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாதாம். தற்போது உச்ச நடிகரின் இரண்டாவது மகள் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில், தனது கணவரை அவர் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனது மகளை சமாதானப்படுத்துவதற்காக தனது நண்பர்களையும், நெருக்கமானவர்களையும் மகளுக்கு தூது விட்டாராம். ஆனால், இவரது முயற்சி எதுவும் பயனளிக்கவில்லையாம். இதனால், உச்ச நடிகர் மிகுந்த மனக்கஷ்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Similar News