சினிமா

கவர்ச்சியில் இறங்கிய பட்டணத்து நடிகை! கலக்கத்தில் முன்னணி நடிகைகள்

Published On 2016-04-18 21:28 IST   |   Update On 2016-04-18 21:28:00 IST
பட்டணத்து நடிகை கவர்ச்சியில் தாராளம் காட்டி, முன்னணி நடிகைகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளாராம். இதுகுறித்து பார்ப்போம்....
வெளிநாட்டு நடிகையான பட்டணத்து நடிகை தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்து வெற்றிவாகை சூடி வருகிறார். இதனால் தமிழில் முன்னணி நடிகைகள் கொஞ்சம் ஆட்டம் கண்டு போயிருக்கிறார்கள். தமிழில் இவரது மார்க்கெட் உயர்ந்திருந்தாலும், தெலுங்கு பக்கம் போனால் இவரது மார்க்கெட் கொஞ்சம் டல்லடிக்கத்தான் செய்கிறதாம்.

இதனால் என்ன செய்யலாம் என்று யோசனை செய்தவருக்கு தற்போது புது ஆயுதம் ஒன்று கையில் கிடைத்திருக்கிறதாம். அதாவது படு கவர்ச்சியில் இறங்கினால் தெலுங்கு மார்க்கெட்டில் நல்ல இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்தவருக்கு, தற்போது அந்த முடிவே அவருக்கு தெலுங்கு முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகும் வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறதாம்.

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இயக்குனர் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி இந்த படத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி, தெலுங்கில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம். இதனால், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

Similar News