சினிமா

வயதான நடிகர்களுடன் நடிக்க புது கண்டிஷன் போடும் நடிகை!

Published On 2016-04-04 17:09 IST   |   Update On 2016-04-04 17:09:00 IST
வயதான நடிகர்களுடன் ஜோடி சேரவேண்டுமானால் தன்னுடைய கண்டிஷன்களுக்கு ஒத்துவந்தால் நடிக்க தயார் என்று முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் யாரென்று பார்த்தால் அவர் நயன நடிகை மட்டும்தான். இவர் தங்களுடைய படங்களில் நடிக்கிறார் என்றால் அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாராவும் தனது கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது வயதான நடிகர்களுடன் நடிக்கவும் நயன்தாராவுக்கு நிறைய அழைப்புகள் வருகிறதாம். அப்படி வருபவர்களிடம் நயன நடிகை தற்போது புதிய கண்டிஷன்களை போட ஆரம்பித்திருக்கிறாராம்.

அதாவது, வயதான நடிகர்களுடன் நடிக்க வேண்டுமானால் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி தரவேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷனாம். தயாரிப்பாளர்களும் இவருக்காக அந்த சம்பளத்தை கொடுக்க முன்வருகிறார்களாம். இதனால், நயன நடிகையின் காட்டில் தற்போது பயங்கரமான பண மழைதான் என்று சொல்லவேண்டும். 

Similar News