சினிமா செய்திகள்

ஹனிமூன்ல கூட மியூசிக்ல தான் இருந்தாரு! - ஏ.ஆர்.ரகுமான் குறித்து வெளிவராத தகவல்

Published On 2024-11-21 11:14 IST   |   Update On 2024-11-21 11:14:00 IST
  • ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார்.
  • இதனைத் தொடர்ந்து பழைய விடியோக்கள், பழைய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவின் புகழ்பெற்ற இசையப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் இருவருடைய கடந்த கால வாழ்க்கை குறித்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹனிமூனுக்கு சென்ற இடத்திலும் மியூசிக் கம்போஸ் செய்தார் ஏர்.ஆர். ரகுமான் என சாய்ரா பானுவின் சகோதரி கணவரும், நடிகருமான ரகுமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரகுமான் கூறுகையில் "அவர்கள் ஹனிமூனுக்கு சென்றிருந்த நேரத்தில் அவர்களுக்கு நான் போன் செய்திருந்தேன். அப்போது நள்ளிரவு 12 முதல் 1 மணி வரை இருக்கும். சாய்ரா பானு தூங்கிக் கொண்டிருந்த நிலையில், எழுந்து பதில் அளித்தார். அப்போது ரகுமானை எங்கே என்று நான் கேட்டேன்.

எனக்கு தெரியாது என்று சாய்ரா கூறினார். அவர் மற்றொரு அறையில் வீணை வைத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கம்போசிங் செய்து கொண்டிருந்தார். அவர் அப்படிப்பட்ட நபர். அந்த அளவிற்கு மியூசிக் மீது தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News