சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் VJS 52- மே.3ம் தேதி டைட்டில் டீசர் வெளியீடு

Published On 2025-05-01 19:37 IST   |   Update On 2025-05-01 19:37:00 IST
  • இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.
  • விவேஜஎஸ் 52 படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூர் மற்றும் மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டது. இப்படம் குறித்த முழு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த படம் எனது பாணியில் குடும்பப் படமாக அமையும். இளைஞர்களுக்கு பிடிக்கும் படமாகவும் இது இருக்கும் என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

மேலும், விஜய் சேதுபதியும், இயக்குனர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இதுவே. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜேஎஸ் 52 படத்தின் டைட்டில் டீசர் வரும் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News