உன்னை நினைத்து படத்தில் விஜய் நடித்தபோது... இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ
- சூர்யா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து படம் வெற்றி பெற்றது.
- இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள அவரது கடைசி படமான ஜனநாயகன் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகவுள்ளது
இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் நடித்த காட்சிகளை இயக்குநர் விக்ரமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "உன்னை நினைத்து படத்தில் இடம் பெற்ற "என்னை தாலாட்டும் "பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் Social மீடியாவில் வைரல் ஆனது.. இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..
அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஓன்று கிடைத்தது..மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு post செய்கிறேன்... PLEASE DONT COMPARE this video with the existing video by Mr.Surya. Both are great performers" என்று தெரிவித்துள்ளார்.
விக்ரமன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்வது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.