சினிமா செய்திகள்

பைசன் - காளமாடன் வெல்லட்டும்!- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-10-17 09:07 IST   |   Update On 2025-10-17 09:07:00 IST
  • மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
  • கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' படம் இன்று வெளியானது. இதையொட்டி முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. திரைப்படத்தை பார்த்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பைசன் - காளமாடன் வெல்லட்டும்! என்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News