சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

Published On 2025-06-19 09:07 IST   |   Update On 2025-06-19 09:07:00 IST
  • பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.
  • ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெறவுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான இப்படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' பட சண்டை காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், பல்வேறு சாதனைனகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

டாம் குரூஸுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெறவுள்ளது. கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்படும் இந்த ஆஸ்கர் விருதானது 35 வருடங்களுக்கு பிறகு டாம் குரூஸுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News