சினிமா செய்திகள்
null

`மாரீசன் படத்தின் கதை இதுதான்' - இயக்குநர் சுதீஷ் சங்கர்

Published On 2025-07-11 10:20 IST   |   Update On 2025-07-11 10:23:00 IST
  • வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.
  • இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு- ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரீசன்.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் கதைசுருக்கத்தை இயக்குநர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது " வடிவேலுவிற்கு அல்சைமர் என்ற நியாபகம் மறதி நோய் இருக்கிறது. வடிவேலு வங்கியில் பெரும் பணத்தை எடுப்பதை திருடனான ஃபஹத் ஃபாசில் பார்க்கிறார். இதை எப்படியாவது வடிவேலுவிடம் இருந்து திருடிவிட வேண்டும் என நினைக்கிறார் ஃபஹத். அதனால் வடிவேலுவை திருவண்ணாமலை வரை வண்டியில் இறக்கிவிடுகிறேன் என கூறி அழைத்து செல்கிறார் அந்த பயணத்தை இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நண்பர்களாகின்றனர். இதற்கு அடுத்து என்ன ஆனது? ஃபஹத் கடைசியில் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதையாகும்.

Tags:    

Similar News