சினிமா செய்திகள்
null

"ஆண் பாவம் பொல்லாதது" படத்தின் "மண மகனே" பாடல் வெளியானது

Published On 2025-10-26 20:56 IST   |   Update On 2025-10-26 20:58:00 IST
ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'ஆண்பாவம் பொல்லாதது' படம் வருகிற 31-ந்தேதி வெளியாக உள்ளது.

'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் பெண் பார்ப்பது முதல் திருமணம், குடும்ப சண்டை, விவாகரத்து என திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கு இடையே நடப்பதை சொல்லப்பட்டுள்ளது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஆண் பாவம் பொல்லாதது படத்தின் மண மகனே பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Full View
Tags:    

Similar News