சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் பாரத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
- நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
- கட்சி சேர பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பில் 'மிஸ்டர் பாரத்' படம் உருவாகியுள்ளது.
நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். கட்சி சேர பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
காமெடி படமாக உருவாகியுள்ள 'MR பாரத்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.