சினிமா செய்திகள்
null

பெண்ணின் பிறந்த வீடு, ஒரு போதும் அவளுக்கு அந்நியமாகி போகாது என்று ஆழமாய் சொன்னதற்கு நன்றி - 3 BHK படத்தை பாராட்டிய ஹலிதா

Published On 2025-07-04 12:29 IST   |   Update On 2025-07-05 11:38:00 IST
  • சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.

திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு நடுத்தர குடும்பம் அவர்களது கனவு இல்லத்தை வாங்க எப்படி கஷ்டப்படுகிறார்கள என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை இயக்குநர் ஹலிதா ஷமீம் பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் "ஒரு கூடு கட்ட முயலும் அழகிய தூக்கணாங் குருவிகளாய் ஒரு குடும்பம்.

கண் முன்னே அவர்களின் வாழ்க்கையை அழகிய தொகுப்பாய், ஒரு photo album காண்பிப்பது போல் படம் எடுத்து காட்டி, தன் பரிசுத்த சிரிப்பால், முதன் முறையாக தன் இயல்பு பிரதிபலிக்கும் வகையில் 3BHK எனும் பேரழகு படம் எடுத்திற்கு அன்பு ஸ்ரீகணேஷிற்கு வாழ்த்துகள்!

பிகு: பெண்ணின் பிறந்த வீடு, ஒரு போதும் அவளுக்கு அந்நியமாகி போகாது, பாரமாகி விடாது என்று அழகாய், ஆழமாய் சொன்னதிற்கு நன்றி. இன்றைய சூழலில் அவசியம் அந்த நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது." என கூறியுள்ளார்.

Tags:    

Similar News