சினிமா செய்திகள்
null

விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்

Published On 2024-02-07 04:56 GMT   |   Update On 2024-02-07 05:51 GMT
  • நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
  • இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.


தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், தனது 69-வது படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், விஷாலும் விஜய்யை போன்று 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.


நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என பெயர் மாற்றம் செய்துள்ளார். இவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News