சினிமா செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெறும் விஜய் சேதுபதி பட ஷூட்டிங்.. ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

Published On 2023-07-04 16:00 IST   |   Update On 2023-07-04 16:00:00 IST
  • இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
  • இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாகும்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் படபிடிப்பு நேற்று முன்தினம் முதல் புதுவை அதன் சுற்றுப்பகுதியில் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக கனமழையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. புதுவை அய்யங்குட்டி பாளையம் பீர் பேக்டரி அருகே ரூ 15 லட்சத்தில் தனி வீடு செட் அமைக்கப்பட்டு அதில் சூட்டிங் நடந்தது. விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சூட்டிங் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News