சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா

null

நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா.. வைரலாகும் புகைப்படம்..

Update: 2022-07-02 07:06 GMT
  • பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் லைகர்.
  • இந்த படத்தில் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடித்திருக்கிறார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் நிர்வாண புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா

அதாவது, விஜய் தேவரகொண்டா கையில் பூங்கொத்துடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு "இந்தப் படம் என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. உடல் அளவிலும், மனதளவிலும், மிகவும் கடினமான பாத்திரம். நான் உங்களிடம் எல்லாவற்றையும் கொடுக்கிறேன். விரைவில் வருகிறது லைகர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News