சினிமா செய்திகள்

சமந்தா - விஜய் தேவரகொண்டா

உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம்.. சமந்தா குறித்து விஜய்தேவரகொண்டா பதிவு..

Published On 2023-02-01 16:41 IST   |   Update On 2023-02-01 16:41:00 IST
  • நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமந்தா பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தா இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.


விஜய் தேவரகொண்டா - சமந்தா

இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சமந்தா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும் 'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு "குஷி திரைப்படம் விரைவில் தொடங்கப்படும். விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


விஜய் தேவரகொண்டா - சமந்தா

இந்நிலையில், இந்த பதிவை பகிர்ந்து விஜய் தேவரகொண்டா, "முழு ஆரோக்கியத்துடனும் பெரிய புன்னகையுடனும் நீங்கள் வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


Tags:    

Similar News

வடம்- Movie Review