சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி

உங்களிடம் விரைவில் பேசுகிறேன்.. உடல் நிலை குறித்து பதிவு வெளியிட்ட விஜய் ஆண்டனி..

Published On 2023-01-24 20:45 IST   |   Update On 2023-01-24 20:46:00 IST
  • ’பிச்சைக்காரன் -2’ படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டது.
  • இவர் தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


விஜய் ஆண்டனி

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது இவர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


விஜய் ஆண்டனி பதிவு

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் நலம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News