சினிமா செய்திகள்

கவுதம் மேனன் - கமல்ஹாசன்

null

கமலை குறிவைக்கும் கவுதம் மேனன்.. வெளியான புதிய தகவல்..

Update: 2022-08-17 13:04 GMT
  • இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2006-ல் வெளியான படம் "வேட்டையாடு விளையாடு".
  • "வேட்டையாடு விளையாடு - 2" படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் "வேட்டையாடு விளையாடு". இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


வேட்டையாடு விளையாடு

இதையடுத்து சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியானது. அதன் பின்னர் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் "வேட்டையாடு விளையாடு -2" படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முழு கதையையும் இயக்குனர் கவுதம் மேனன் எழுதியுள்ளதாகவும் விரைவில் கமலை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


வேட்டையாடு விளையாடு

படத்தின் கதைக்கு கமல் ஓகே சொல்லிவிட்டால் வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டுக்கு பிறகு "வேட்டையாடு விளையாடு" படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணியை கவுதம் மேனன் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News