சினிமா செய்திகள்
'மாயி' சுந்தர்
null
வெண்ணிலா கபடி குழு பட நடிகர் 'மாயி' சுந்தர் உயிரிழந்தார்
- வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் 'மாயி' சுந்தர்.
- மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 'மாயி' சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி, கட்சிக்காரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் 'மாயி' சுந்தர். இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
வெண்ணிலா கபடி குழு - 'மாயி' சுந்தர்
இந்நிலையில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.