சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ்

சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது?

Published On 2023-03-26 17:18 IST   |   Update On 2023-03-26 17:18:00 IST
  • ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘1947- ஆகஸ்ட் 16'.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


1947 ஆகஸ்ட் 16


தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்.


ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன்


இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளதாகவும் இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையவுள்ள படம் குறித்து அறிவிப்பு அப்பொழுது வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News