சினிமா செய்திகள்

சிம்பு

null

இசை வெளியீட்டு விழாவுக்கு தயாரான சிம்பு

Published On 2022-08-19 12:49 IST   |   Update On 2022-08-19 12:50:00 IST
  • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.
  • வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

 

வெந்து தணிந்தது காடு

அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

 

வெந்து தணிந்தது காடு

இதனை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும், அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி இடம்பெறும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News