சினிமா செய்திகள்
null
போக்குவரத்து விதிமீறல்.. அபராத தொகையை செலுத்தினார் விஜய்
- விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
- இதனை நடிகர் விஜய் ஆன்லைன் வாயிலாகாக செலுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் நேற்று பனையூர் விஜய் மக்கள் நல இயக்க அலுவகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதற்காக நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை பகுதி சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது.
இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ரூ.500 அபராத தொகையை நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் செலுத்தினார்.