சினிமா செய்திகள்

ஸ்ருதிஹாசன்

null

ரசிகர்களுக்கு 'இரட்டை' விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன்

Published On 2022-12-06 08:49 GMT   |   Update On 2022-12-06 09:43 GMT
  • நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன்.
  • இவர் நடித்திருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மகள். ஸ்ருதிஹாசன் தற்போது தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

ஸ்ருதிஹாசன்

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது. சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்திலும், பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்திலும் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி விடுமுறை தினத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஸ்ருதிஹாசன் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், 'தி ஐ' எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News