சினிமா செய்திகள்

சந்தானம்

null

வெளியானது சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி

Published On 2022-07-08 13:01 GMT   |   Update On 2022-07-08 13:02 GMT
  • இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'குலு குலு'.
  • 'குலு குலு' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா நடித்திருக்கிறார்.

'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதனை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.


'குலு குலு' போஸ்டர்

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News