சினிமா செய்திகள்

சிம்பு -ஞானவேல் ராஜா

எனக்கும் சிம்புவிற்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

Update: 2023-03-21 13:22 GMT
  • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'.
  • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


சிம்பு 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து 'பத்து தல' படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'பத்து தல' படம் குறித்தும் அவர் அடுத்து தயாரித்து வரும் படங்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


ஞானவேல் ராஜா

அதில், ரொம்ப பெரிய மனசு இருக்கும் நடிகர் சிம்பு. வெளியில் தான் எங்களை வைத்து சர்ச்சை கருத்துகளை பரப்பினார்கள். எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. நான் 18 வருடங்களாக சிம்புவிடம் எப்படி பழகி கொண்டு இருந்தேனோ அதே உறவு தான் எப்போதும் இருக்கிறது. என்னைக்கும் அது மாறவில்லை. தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்ததால் இந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தான் தயாரிப்பாளர் கவுன்சில் இந்த மாதிரியான விஷயங்களில் தற்போது ஈடுபடுவதில்லை" என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.Full View


Tags:    

Similar News