சினிமா செய்திகள்
null

மனோபாலா மறைவு: இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் நேரில் அஞ்சலி

Published On 2023-05-04 05:17 GMT   |   Update On 2023-05-04 05:18 GMT
  • மனோபாலாவின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் மனோபாலா உடலுக்கு இயக்குனர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News