சினிமா செய்திகள்
null

Hi friends Bye friends.. புதிய புகைப்படத்தை வெளியிட்ட கங்கனா ரனாவத்

Published On 2023-06-05 03:32 GMT   |   Update On 2023-06-05 04:21 GMT
  • கங்கனா ரனாவத் தற்போது சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.
  • இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை குழப்பியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான தலைவி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது எமர்ஜென்சி படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார்.


கங்கனா ரனாவத்

இந்நிலையில் கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பதிவிட்டிருப்பது, Hi friends… Bye friends என்று ஜாலியாக பதிவிட்டு ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளார். வித்யாசமாக இருக்கும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News