சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷுக்காக களமிறங்கிய 'குட்நைட்' இசையமைப்பாளர்

Published On 2023-07-31 21:00 IST   |   Update On 2023-07-31 21:01:00 IST
  • இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’.
  • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜப்பான்' படத்திற்காக 'குட் நைட்' பட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மெலடி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "ஜப்பான் படத்திற்காக ஷான் ரோல்டன் குரலில் மெலடி பாடலை பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனது திரைப்பயணத்தில் இது சிறந்த மெலடியாக இருக்கும்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.





Tags:    

Similar News